வருடத்துக்கு ஒரு படம் – தாய்மொழியில் தலைகாட்டும் அமலாபால்

176

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் அமலாபால் நடித்திருப்பதென்னவோ ஒரே ஒரு மலையாளப்படத்தில் மட்டும்தான். கடந்தவருடம் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கிய ரன் பேபி ரன் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். படமும்சூப்பர்ஹிட். ஆனால் அதன்பின் தமிழிலும் தெலுங்கிலும் பிஸியாகிவிட்டதால் அமலாபால் மலையாள சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. மேலும் மலையாளத்தில் சம்பளமும் குறைவு என்பதும் ஒரு காரணம்.

அதற்காக தாய்மொழியை விட்டுவிடமுடியுமா என்ன? தற்போது இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் இயக்குனர் ஃபாஸிலின் மகன் ஃபஹத் ஃபாஸிலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார் அமலாபால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோட்டயத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நயன்தாரா, அசின், நவ்யா நாயர் உட்பட பலபேர் சத்யன் அந்திக்காடு படங்களில் நடித்துத்தான் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.