சினிமாவில் கோடிகளைக் கொட்டி ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். போட்ட பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படத்திற்கான சாட்டிலைட் உரிமை விற்பனையிலேயே எடுத்துவிடும் சாத்தியம் இருப்பதால் தான், தயாரிப்பாளர்களும் கொஞ்சம் தெம்புடனேயே தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் பல பிரச்சனைகளுக்கு நடுவில் வெளியான விஜய் நடித்த ‘தலைவா’ படம் தியேட்டர் வசூலில் சோபிக்கவில்லை என்றாலும் அதன் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி 15 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. தற்போது சூர்யா நடித்துவரும் படமும் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது.
கார்த்தி நடித்து அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘பிரியாணி’ என இரண்டு படங்களுமே தலா 11.5 கோடிக்கும், பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜீத்தின் ‘வீரம்’ படம் 13 கோடிக்கும் விலைபோயிருக்கின்றன. இவற்றையும் சன் டி.வியே கைப்பற்றியிருக்கிறது.