ஷாருக்கானை கௌரவித்த பிரிட்டிஷ் அரசு..!

78

உலகில் சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கும் ‘சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர்’ விருது (குளோபல் டைவர்சிட்டி அவார்டு) வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்த விருதை வழங்கி இங்கிலாந்து அரசு கெளரவப்படுத்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர்.

சினிமா துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில் இவ்விருதை பெறுவது தனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிப்பதாகவும் அற்புதமான இந்த விழாவில் தன்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி என்றும் கூறியுள்ளார் ஷாருக்கான்.

Comments are closed.