உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.
அவ்வகையில் வரும் நவ-3ஆம் தேதி ஜாக்கிசான் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தான் ‘தி பாரினர்’. பெயர் அப்படி இருந்தாலும் இப்படத்தில் ஜாக்கிசான் சென்னையைப் பற்றி லோக்கலாக வசனம் பேசுகிற காட்சிகளுக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கல கலக்கும் என்கிறார்கள்.
ஜாக்கிசான் நடித்த மூலப்படமான ‘தி பாரினர்'(The Foreigner)ஆங்கிலப்படம் அக்-13ஆம் தேதியன்றே இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 150 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் ஜாக்கிசானுடன் மோதும் வில்லனாக பேஸ்பர்ஜான் நடித்திருக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கேசினோ ராயல்’ படத்தை இயக்கியுள்ள மார்ட்டின் கேம்பக் இயக்கத்தில் தயாராகி உள்ள ‘தி பாரினர்’ தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஹாலிவுட் படமாக இருக்கும் என்கிறார் ஒயிட் பாக்ஸ் ஸ்டுடியோ சார்பில் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ள ரங்கநாதன்.

Comments are closed.