சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

239

சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கு ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர் என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது லிங்குசாமியின் டைரக்‌ஷனில் சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளரான அவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இதேபோன்றதோரு உயரிய கௌரவத்தை பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரி, சந்தோஷ் சிவனுக்கு வழங்கியுள்ளது. வருடந்தோறும் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் செமினார் வகுப்புகளில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகெங்கிலும் உள்ள திரையுலக ஜாம்பவான்கள் பலர் அழைக்கப்படுவதுண்டு.

அந்தவகையில் இந்த வருடம் நமது இந்தியாவில் இருந்து அந்த செமினார் வகுப்பில் கலந்துகொள்ள சந்தோஷ் சிவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை-11ல் இதில் கலந்துகொள்ள கிளம்புகிறார் சந்தோஷ் சிவன். கடந்த வருடம் மலையாள திரையுலகின் பிதமாகர்களில் ஒருவரும் இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபலாகிருஷ்ணன் இந்த வகுப்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.