மலையாளத்தில் சுரேஷ்கோபிக்கு அடுத்தபடியாக அதிகமான படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் போடுவது பிருத்விராஜ்தான். அதற்கேற்ற மாதிரி இவருக்கும் போலீஸ் கேரக்டர் கச்சிதமாக பொருந்துகிறது. இல்லையென்றால் 13 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்க முடியுமா?
இந்த வருடத்தில் மட்டும் ‘மும்பை போலீஸ்’, ‘மெமோரிஸ்’ என இரண்டு படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ் இதில் ‘மும்பை போலீஸ்’ படத்தில் ‘ராஸ்கல் மோசஸ்’ என்ற ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக அசத்தியிருந்தார் பிருத்விராஜ்.
இதைத் தொடர்ந்து தற்போது இன்னொரு படத்திலும் 42 வயது போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிருத்விராஜ். படத்தின் பெயர் ‘செவன்த் டே’. போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பிருத்விராஜ், போலீஸ் ரெக்கார்டில் பதிவாகாத ஒரு கொலைக்கேஸை எப்படி ஏழு நாட்களில் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
இந்தப்படத்தில் பிருத்விராஜின் வயது 42 என்பதால் நரைத்த முடியுடன் அதாவது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார். கிட்டத்த ‘மங்காத்தா’ அஜீத்தின் கெட்டப் மாதிரி. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஜனனி ஐயர் நடிக்க, முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் அஜ்மல்.