‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என தொடர் வெற்றிகளாக குவித்துவரும் விஜய் சேதுபதிக்கு அடுத்து ரிலீஸாக இருக்கும் படம் ‘ரம்மி’. இந்தப்படத்தை கே.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகர், பரோட்டா சூரி இருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்திலும் இவர்கள் மூவரும் இணைந்து நடித்திருந்தனர்.
கதாநாயகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் ஏற்கனவே திட்டமிட்டபடி டிசம்பர்-27ஆம் தேதி ரிலீஸாகிறது.
விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி ஆகியோர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராமல் சந்திக்கும் சில பிரச்னைகளையும், காதல் அவஸ்தைகளையும் இந்த படம் சொல்கிறது.