தனுஷ் நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. தனுஷுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம் டைரக்ஷனில் அடியெடுத்துவைத்திருக்கிறார். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று(டிச-25) இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் டீஸ்ரையும் வெளியிடுகிறார்கள். அத்துடன் ஜனவரி-3ஆம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘3’ படத்திற்குப்பிறகு தனுஷ், அனிருத் இருவரும் இணைவதால் மீண்டும் ‘கொலவெறி’ மாதிரி ஒரு பரபரப்பை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃப்லிம்ஸ்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. படத்தை சம்மரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.