பொங்கல் வெளியீடு என்பதால் ‘வீரம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத்தின் இசையை மிகப்பெரிய பலமாக கருதிகிறார்கள் அஜித்தும் இயக்குனர் சிறுத்தை சிவாவும். இந்தப்படத்தின் பாடல்களால் கவரப்பட்ட ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் இதன் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. மேலும் சூடோடு சூடாக ஆடியோ ரிலீஸையும் நடத்த முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.