‘சாகசம்’ செய்ய புறப்பட்டார் பிரசாந்த்..!

99

தமிழ்சினிமாவில் நடிகனாக அறிமுகமாகி இருபது வருடங்கள்., வரிசையாக மணிரத்னம், ஷங்கர் என பிரபல முன்னணி இயக்குனர்களின் படங்கள், உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஹீரோவாக நடித்தது, கலைஞரின் கதைவசனத்தில் நடிக்கும் வாய்ப்பு என தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ள ஏராளமான நிகழ்வுகள் இருக்கின்றன பிரசாந்த்திற்கு.

ஆனால் இன்று இளம் கதாநாயகர்களின் வரவால் பிரசாந்த்தின் சினிமா பயணத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. 2006க்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்துதான் ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்கள் ரிலீஸாகின.

இதோ.. இப்போது மூன்று வருடங்கள் ஓடிவிட்டன,. இருந்தாலும் பிரசாந்த் தனது அடுத்த அடியை நிதானமாகவே எடுத்து வைத்து சாகசம் நிகழ்த்த வருகிறார். உண்மைதாங்க.. பிரசாந்த் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் பெயரும் ‘சாகசம்’ தான். படத்தை அவரது தந்தை தியாகராஜனே தயாரிக்க இருக்கிறார். படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.