சிவப்பு’ங்கிறது நம்ம பார்வைக்கு ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால், அதில் காதல், வறுமை, கோபம், கம்யூனிசம், வன்முறை என்று கலரை மீறிய அம்சங்களும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் இணைத்து ‘சிவப்பு’ என்கிற பெயரிலயே ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார் டைரக்டர் சத்யசிவா. இவர்தான் ‘கழுகு’ படத்தை இயக்கியவர்.
இந்தப்படத்தில் தெலுங்கு ஹீரோ நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்க ரூபா மஞ்சரி கதாநாயகியாக நடித்திருக்கிறார் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். ‘எங்கேயும் எப்போதும்’ சத்யா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.