ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ராஜாராணி படத்திற்கு பலவிதமான விளம்பர யுக்திகளை செய்து வருகின்றனர் படக்குழுவினர். இன்று காலை இந்தப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.
இன்னொரு புதுமையாக இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் ஒன்றை இன்று(ஆக-23) இரவு 7 மணிக்கு பெரும்பாலான தமிழ் சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யவிருக்கின்றனர். ஒரு தமிழ் படத்தின் ட்ரெய்லர் ஒரே நேரத்தில் எல்லா முன்னணி டிவி சேனல்களிலும் ஒளிபரப்பப்படுவது இதுதான் முதல் முறை.
இதற்கு முன் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த, ’மை நேம் ஈஸ் கான்’ படத்தின் ட்ரெய்லரை முதன் முதலாக ஒரே நேரத்தில் எல்லா ஹிந்தி சேனல்களிலும் ஒளிபரப்ப செய்து புதுமையை படைத்திருந்தார்களாம். ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம்.புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.