
இன்றைக்கு தேதியில் ‘நான் கடவுள் ராஜேந்திரன் என்கிற ‘மொட்டை’ ராஜேந்திரன் படம் போஸ்டரில் இருந்தால் போதும், அவருக்காகவே இளைஞர் பட்டாளம் தியேட்டருக்குள் தைரியமாக நுழைகிறது.. அந்த அளவு காமெடி பெர்பார்மன்ஸில் பிணி பெடலெடுக்கிறார் ராஜேந்திரன்.. எந்த ஒரு திறமையுள்ள காமெடியனும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர நேரம் வரவேண்டும் அல்லவா..?
ராஜேந்திரனுக்கு இப்போது விஜய் பட ரூபத்தில் அந்த அதிர்ஷ்டம் கதவை தட்டியுள்ளது.. அட்லி டைரக்சனில் விஜய் நடிக்கும் படத்தில் மெயின் காமெடியனாக நடிக்கிறார் ராஜேந்திரன்.. சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டதாலும். அதனால் சூரி பல படங்களில் பிஸியாக இருப்பதாலும் ராஜேந்திரனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாய்ப்பு என்பது இப்படித்தான் வரும்.. ஏற்கனவே அட்லி இயக்கிய ‘ராஜாராணி’ படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி அற்புதமாக ஒர்க் அவுட் ஆனது.. அதனால் தைரியமாக அவரை கூட்டணி சேர்க்கலாம் என அவருக்காக விஜய்யிடம் பரிந்துரை செய்தவர் அட்லிதானாம். நிச்சயம் இது ஹிட் காம்பினேஷனாகத்தான் இருக்கும்.
Comments are closed.