“ராஜாராணி’ நல்லா இருக்கு” – பரவுகிறது மவுத் டாக்

109

ரிலீஸாவதற்கு முன்பே, ராஜாராணி படத்திற்கு பல வகையில் விளம்பர யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. அதில் உச்சகட்டமாக நயன்தாரா, ஆர்யாவுக்கு திருமணம் என ஸ்டண்ட்டெல்லாம் அடித்தனர். இருந்தாலும் படம் ரிலீஸான பின்னர், படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என மற்றவர்களிடம் வாய்மொழியாக கூறியதின்மூலம் படத்திற்கான கூட்டம் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளதாக படம்பார்த்த பலரும் குறிப்பிடுகிறார்கள்.

ராஜாராணி படம் வெளியான வெள்ளிக்கிழமை தினத்தன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 3 கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலித்தது. ஆனால் மறுநாள் படம் நன்றாக இருப்பதாக ஒரு ‘மவுத் டாக்’ பரவவே வசூல் 4 கோடி ரூபாயை எட்டியது. அடுத்தடுத்த நாட்களில் இது அதிகரித்து வருவதால் உற்சாகத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் இயக்குனர் அட்லீயை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.