இன்று அரண்மனை படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்துவிட்டார் சுந்தர்.சி. கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு கலகலப்பு, மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் சுந்தர்.சி ‘அரண்மனை’ படத்தை இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கூடவே இருந்து கலகலப்பூட்டி, தீயாக வேலை செய்ய வைக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்.
சுந்தர்.சிக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறார். வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க, பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி.