‘பேராண்மை’ படத்துக்குப்பின் எஸ்.பி.ஜனநாதன் நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க, பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறார் ஜனநாதன். படத்தின் பெயர் ‘புறம்போக்கு’. படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸுடன், ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
ஆனால் இந்த தலைப்பை ஏற்கனவே வேறு ஒருவர் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதனால் ‘புறம்போக்கு’ தலைப்பை வைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் ஒரு செய்தி அடிபட்டு வந்தது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை வெளியிடு இருக்கிறது யுடிவி மோஷன் பிகசர்ஸ் நிறுவனம்.
‘புறம்போக்கு’ என்கிற டைட்டில் இயக்குனர் ஜனநாதனுக்கு சொந்தமானதுதான். இதை நாங்கள் முறையாக பதிவு செய்திருக்கிறோம். இதனை ஃப்லிம் சேம்ப்ர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டு அமைப்பு மூன்றுமே ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளன. அதனால் இதைப்பற்றிய குழப்பம் இனி யாருக்கும் வேண்டாம் என அதில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.