
ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ் திரையுலகில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது அவர் முதன்முதலாக இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் தான்.. பல கொலைகளை செய்த ஆட்டோ சங்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, 1989ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்தப்படம் போலீஸ் படங்களில் ஒரு ட்ரென்ட் செட்டராக திகழ்ந்தது. பல வருடங்கள் கழித்து, இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரசாந்தை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார்.
சில வருடங்களாக வெளிவரமுடியாமல் கிடப்பில் இருந்த இந்தப்படத்தை வெளியிடுவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஆர்.கே.செல்வமணி. அதன் பலனாக விரைவிலேயே, கிட்டத்தட்ட 19௦ தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செயவும் ஏற்பாடுகள் செய்துவிட்டாராம். ஆட்டோ சங்கர் ஜெயிலில் இருந்து தப்பிப்பது போலவும், அதை தொடர்ந்து புலனாய்வு அதிகாரியான பிரசாந்த் களத்தில் இறங்குவதுபோலவும் இரண்டாம் பாகத்தின் கதை ஆரம்பிக்கிறதாம்.
Comments are closed.