ஷாமிலி, பிருத்விராஜை வசியப்படுத்திய விஜய்..!

241

vijay fans

தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பேபி ஷாமிலி.. இனி என்ன பேபி.. அதான் வளர்ந்துட்டாருல்ல.. குமாரி ஷாமிலி.. ஷாலினியின் தங்கை, அஜித்தின் கொழுந்தியாள் என்கிற அடைமொழிகளை கொண்டுள்ள ஷாமிலி, இதில் விஜய் ரசிகையாக நடிப்பதுதான் ஹைலைட்டான விஷயமே… சமீபத்தில் படம் தொடர்பாக வெளியான ஒரு புகைப்படத்தில் ஷாமிலி ஓட்டிவரும் டூவீலரின் முகப்பில் விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது இதை உறுதி செய்கிறது.

இதேபோல விஜய்யால் வசீகரிக்கப்பட்ட இன்னொருவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.. ‘பாவாட’ என்கிற மலையாள படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார் பிருத்விராஜ்.. படத்தில் ‘தண்ணிவண்டி’யான பிருத்விராஜ் விஜய் படம் ரிலீசாகும்போது தியேட்டர்களில் அட்டகாசம் பண்ணுவதும், அவ்வப்போது அவரது ஸ்டைல்களை பிரதிபலிப்பதும் என விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடித்திருக்கிறாராம்

Comments are closed.