ரஜினி ஸ்டைலில் சரக்கு வாங்கிய பாபி சிம்ஹா..!

211

urumeen 2
ரஜினி நடித்த மன்னன் படங்களில் மிகவும் அதிகமாக அப்ளாஸ் வாங்கிய நகைச்சுவை காட்சி என்றால் ரஜினியும் கவுண்டமணியும் தியேட்டரில் சின்னதம்பி படம் பார்க்க டிக்கெட் எடுக்கும் காட்சி தான். அதில் டிப்டாப்பாக படம் பார்க்க செல்லும் ரஜினி ஒரு வழியாக முண்டியடித்து முதல் ஆளாக டிக்கெட் வாங்கி கவுன்டருக்கு வெளியே வரும்போது அணிந்திருந்த கண்ணாடியில் ஒரு பக்க கிளாஸ் இல்லாமல் வெளியே வருவார்.

பாபிசிம்ஹா நடிப்பில் வரும் டிச-4ஆம் தேதி வெளியாகவுள்ள ‘உறுமீன்’ படத்தில் இருந்து சமீபத்தில் ‘ஹேய் உமையாள்’ என்கிற பாடலின் டீசரை வெளியிட்டார்கள். அதில் கல்லூரியில் படிக்கும் ரேஷ்மி மேனனை கவர, சக மாணவரான பாபி சிம்ஹா சில ட்ரிக்குகள் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதுமட்டுமல்ல.. காந்தி ஜெயந்திக்கு முதல் டிப்டாப்பாக ட்ரெஸ் அணிந்து கூலிங்கிளாஸ் அணிந்து கிளம்பும் பாபி சிம்ஹா, ஒயின் ஷாப்பில் தள்ளுமுள்ளுக்கிடையே வெற்றிகரமாக பீர் பாட்டிலை வாங்கி வருவது போலவும், அப்போது அவரது கண்ணாடியின் ஒரு பக்க கிளாஸ் இல்லாமல் இருப்பது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது.. ரஜினி சினிமா டிக்கெட் வாங்கி உற்சாகமாக கைகளை தூக்கி காண்பித்தது போலவே, இதில் பாபிசிம்ஹாவும் பீர்பாட்டிலை தூக்கி காண்பிக்கிறார்.

Comments are closed.