ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா – புதிய படத்தை ஆரம்பித்தார் ஜெயம் ராஜா

62

விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டது ஆச்சர்யம் தான். ஆனால் அதற்கு காரணமும் இருக்கிறது. முதலில் நல்ல ஸ்கிரிப்ட்.. அதன் பிறகு தம்பி ஜெயம் ரவியின் கால்ஷீட்.. இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் அல்லவா?

இப்போது இரண்டும் கிடைத்துவிட்டது.. துவங்கிவிட்டார் தனது புதியபடத்தை. இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வெற்றிகரமான வசனகர்த்தாக்களாக வலம் வரும் இரட்டை எழுத்தளர்களான சுபா தான் இந்தப்படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். கல்பாத்தி அகோரம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஜெயம் ராஜா-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இது.

Leave A Reply

Your email address will not be published.