சிம்புவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்ட கௌதம் மேனன் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தப்படத்திற்கு தனது ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் பாடலில் இடம்பெற்ற ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற சூப்பர்ஹிட் வார்த்தைகளை எடுத்து கவிதையாக பெயர் வைத்திருக்கிறார்.
சிம்புவுக்கு ஜோடியாக இந்தப்படத்தில் பல்லவி சுபாஷ் என்ற வட இந்திய மாடல் கம் நடிகையை அறிமுகப்படுத்துகிறார் கௌதம். படத்திற்கு இசையமைப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப்பின் இவர்கள் இந்தப்படத்தின் பாடல்களிலும் மாயாஜாலம் காட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
சில நாட்களாக சிம்புவும் கதாநாயகி பல்லவி சுபாஷும் பங்குபெறும் பாடல்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார் கௌதம். இந்தப்பாடலை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கம்போஸிங் செய்து அனுப்பியிருக்கிறார் ரஹ்மான். தனது படத்திற்கு ரஹ்மான் தந்த இந்த முதல் பாடலைப் பற்றி கௌதம் மேனன் சொல்லும்போது, “பாடலை கேட்கும்போது நம்மை மறந்து கால்கள் ஆட தூண்டுகின்றன” என்கிறார் குதூகலமாக.