கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொட்டுவிட்டது விஜய், மோகன்லால் நடித்துவரும் ஜில்லா. இந்தப்படத்திற்கான இரண்டு பாடல் காட்சிகளை சமீபத்தில்தான் ஜப்பானில் படமாக்கி முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார் இயக்குனர் ஆர்.டிநேசன்.
தற்போது சென்னையில் ஒரு பாடல்காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதனை முடித்த கையோடு அடுத்து மதுரைக்கு கிளம்புகிறார்கள். அங்கேயும் ஒரு பாடல்காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். படப்பிடிப்பு ஆரம்பித்த மதுரையிலேயே படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
படத்தின் வசனப்பகுதி முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதால், ஒருபக்கம் படத்தின் டப்பிங் வேலைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. மோகன்லால் இந்தப்படத்தில் தனது சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார். ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்குப்பிறகு மோகன்லால் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் என்பதால் மிகவும் உற்சாகத்துடன் டப்பிங் பேசியிருக்கிறாராம் மோகன்லால்.