இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி காலமானார். இவர் இறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் இன்று அவரது மனைவி செங்கமலம் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் இன்று காலை செங்கமலம் காலமானார். இதனையடுத்து சினிமா பிரமுகர்கள் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பட்டகாலிலேயே படும் என்ற பழமொழி ஒன்று உண்டு. அது மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் விஷயத்தில் உண்மையாகிவிட்ட்து. மணிவண்ணன் காலமாகி இரண்டு மாதங்களிலேயே அவரது மனைவியும் காலமானது அவரது குடும்பத்திலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.