கேட்பதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒரு அடடே செய்திதான் இது. அதுவும் தமிழ் மற்றும் மலையாள டாப் ஸ்டார்கள் பற்றியதுதான். ரஜினி – மம்முட்டி, கமல்-மோகன்லால், அஜீத் – மம்முட்டி, விஜய் – மோகன்லால் என இதுபோன்ற ஸ்டார் காம்பினேஷன்கள் அமைவது அபூர்வமான ஒன்றுதான். இனி ரஜினியுடன் மோகன்லால் சேர்ந்து நடிப்பாரோ இல்லையோ தெரியாது. ஆனால் கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் மம்முட்டி நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விஸ்வரூபம்-2வை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஒரு படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல்தான். அந்தப்படத்தில்தான் மம்முட்டியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார்.(லிங்குசாமி ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானதே மம்முட்டியை ஹீரோவாக வைத்து இயக்கிய ஆனந்தம் படத்தில்தான்) இப்போது கணக்கு சரியாக வருகிறதா?
இதற்குப்பிறகும் ஒரு கொசுறு செய்தி இருக்கு.. இந்தப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும், விஜய்சேதுபதியும், சாந்தனு பாக்யராஜும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார் என்பதும் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் காற்று வாக்கில் கசிந்த செய்திதான்.