ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிக்கும் டைட்டானிக் ஹீரோ

45

டைட்டானிக் படத்தின் ஹீரோ லியானர்டோ டி-காப்ரியோவை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் பலபேருக்கு தெரியும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இதுவரை எட்டுப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் தவிர இந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களை தயாரித்து வருகிறார் டி-காப்ரியோ. அதில் ஒன்றுதான் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் ரன்னர் ரன்னர்.

பிராட் ஃபர்மன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜஸ்டின் டிம்பர்லேக், ஜென் அஃபெலெக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் டி-காப்ரியோ நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் ஆக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.