‘தலைவா’ படம் தியேட்டர் வசூலில் பெரிதாக ஒன்றும் கலெக்ஷன் காட்டவில்லை என்றாலும் அதன் சாட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. தற்போது சூர்யா நடித்துவரும் படமும் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. கார்த்தியின் படங்கள் தலா 11.5 கோடிக்கும், அஜீத்தின் ‘வீரம்’ படம் 13 கோடிக்கும் சாட்டிலைட் உரிமைக்காக விலை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விலை எல்லாமே நடிகர்களின் வேல்யூவுக்காகத்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இப்படி நடிகர்களுக்காக சாட்டிலைட் உரிமை விலை பேசுவதைவிட, ஒரு படத்தின் கதையை வைத்து அதற்கு விலை மதிப்பிடவேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
இப்படி கூறுவதற்கு அழுத்தமான காரணமும் சொல்கிறார் பிருத்விராஜ். அதாவது நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு சாட்டிலைட் உரிமைக்காக நல்ல விலை கிடைக்குமானால் இன்னும் தரமான படங்களை தயாரிக்க பலர் தைரியமாக முன் வருவார்கள். அப்போதுதன் சினிமா வேறு ஒரு கட்டத்துக்கு நகர முடியும். அதனால் நடிகர்களை வைத்து சாட்டிலைட் உரிமை பேசுவதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார் பிருத்விராஜ். இது, தான் நடித்திருக்கும் படங்களுக்கும் பொருந்தும் என்று அவர் கூறியிருப்பதுதான் ஹைலைட்.