நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். அடுத்து இவர் தமிழில் என்ன படம் இயக்கப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவரோ தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்கப்போகிறார்.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ஷட்டர் படத்தைத்தான் இந்தியில் ரீமேக் செய்யப்போகிறார். மலையாளத்தில் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்தியில் ஷட்டர் படத்தை இயக்கும்முன் தற்போது ஆச்சரியப்படுத்தும் ஒரு காரியத்தை செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு, மெகஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கும் கேங்ஸ்டர் என்ற படத்தின் எடிட்டராக தற்போது வேலைபார்த்து வருகிறார் அல்போன்ஸ்.