பின்னணி பாடகி சைந்தவி சமீபத்தில்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை கரம்பிடித்தார். இப்போது அவரைத் தொடர்ந்து பின்னணி பாடகி சின்மயி திருமணக்கோலம் காணவிருக்கிறார். மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள், சூர்யநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் ராகுல் ரவீந்திரன் தான் மணமகன்.
தெலுங்கில் பிஸியாக நடித்துவரும் ராகுல் தற்போது தமிழில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் வணக்கம் சென்னை படத்திலும் நடித்துள்ளார். இது இருவீட்டார்களும் இணைந்து ஏற்பாடு செய்த திருமணம் தானாம். இந்தத் தகவலை சின்மயியின் தாயார் பத்மாசினி உறுதிப்படுத்தியுள்ளார்.