அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் இந்திப்படத்தில் பிருத்விராஜ்

83

நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். அடுத்து இவர் தமிழில் என்ன படம் இயக்கப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவரோ தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்கப்போகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ஷட்டர் படத்தைத்தான் இந்தியில் ரீமேக் செய்யப்போகிறார்.

மலையாளத்தில் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இந்தியில் ஹீரோவாக நடிக்க அல்போன்ஸ் தேர்வு செய்திருக்கும் நபர் மலையாள இளம் முன்னணி ஹீரோவான பிருத்விராஜ். ஏற்கனவே அய்யா, ஔரங்கசீப் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள பிருத்விராஜுக்கு இது ஹாட்ரிக் சான்ஸ்.

ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ் என இரு மொழிப்படமாக நேரம் படத்தை இயக்கிவிட்டு இப்போது அடுத்ததாக இந்திக்குப் போய்விட்டீர்களே என அல்போன்ஸிடம் கேட்டால், “ஒரு இயக்குனராக என்னை நான் இன்னும் உயர்த்திக்கொள்ளவேண்டும், இந்திய அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதற்கு மேலும் ஏதாவது புதிதாக செய்யவேண்டும், அதற்கு இந்தி சினிமா சரியான வழியாக இருக்கும் என தோன்றியது. அதனால் தான் இந்த ‘ஷட்டர்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன்” என்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.