அஜ்மல், ராதிகா ஆப்தே, நடித்த வெற்றிச்செல்வன் படத்தின் இயக்குனர் ருத்ரன் படத்தை பற்றி நம்மிடம், “படம் நல்லபடியாக முடிஞ்சிருந்தும் சின்ன கிராப்பிக்ஸ் வேலைக்காக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. இப்ப அதுவும் முடிஞ்சிடுச்சு. நாங்க வர்ற நேரத்துல நய்யாண்டி, வணக்கம் சென்னை மாதிரி பெரிய படங்கள் ரிலீஸ் ஆகுறதால ஒதுங்கிட்டோம். இன்னும் சில வாரங்கள்ல வெற்றிச்செல்வன் ரிலீஸ் ஆகும். ராதிகா ஆப்தேவுக்கு இந்த படத்துல நல்ல பேர் கிடைக்கும். அந்த அளவுக்கு நடிச்சிருக்காங்க. ஏறகனவே மேடைநாடக அனுபவம் இருக்கறதால பிரமாதமா நடிச்சிருக்காங்க. சீக்கிரம் ரிலீஸ் தேதியை உங்களுக்கு சொல்றேன் பாஸ்.” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் இயக்குனர் ருத்ரன்.
Prev Post