’ஆறு மெழுகுவர்த்திகள்’ படத்தில் குழந்தைக்காக பிச்சைக்காரரின் காலில் விழுந்து அழுது மனதை கொள்ளை கொள்ளும் நடிப்பை தந்தார் பூனம் கவுர். இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட படம் வதம். இதில் ஒரு கற்பழிப்பு கும்பலிடமிருந்து டீன் ஏஜ் பொண்ணை காப்பாற்றும் துணிச்சல் மிக்க ஹீரோயினாக வருகிறார். கொடைக்கானல் மலைப் பகுதியில் அடர்ந்த காட்டிற்குள் நடந்த படப்பிடிப்பில் தயக்கம் இல்லாமல் நடித்து ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார் பூனம். அவர் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் இந்தபடம் பல்வேறு சிக்கல்களால் முடங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் தடைகளை வதம் செய்து வெளிவரும் ‘வதம்’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.