காஞ்சனா படம் தந்த பரபரப்பான வெற்றி கோடம்பாக்கத்தையே வியக்க வைத்தது. அதற்கு பிறகு வந்த திகில் படமான பீட்சா இன்னும் ஒரு படி மேலே வசூலை குவித்தது. அந்த வரிசையில் தயாராகும் இன்னுமொரு திகில் படம்தான் ’கோப்பெருந்தேவி’ சிங்கம்புலி, விடிவி கணேஷ், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, அனுமோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, அல்வா வாசு, சாம்ஸ், பாண்டு, வெங்கல்ராவ், சுவாமிநாதன், மனோபாலா, இளவரசு, வடிவுக்கரசி, உட்பட நடிகர், நடிகைகள் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
படத்தை இயக்கும் ஹிருஷிகேசஅச்சுதன்சங்கரிடம் பேசியபோது, “இது வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகும் படம். திகிலுடன் வயிறு குலுங்கவைக்கும் காமெடி காட்சிகளுடன் படம் ரொம்பவே வித்தியாசமாக வந்திருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்தவுடன் இரண்டாம் பாகத்தின் முதல் காட்சியுடன் படம் முடியும்.” என்றார் சங்கர். இவர் இதற்கு முன் சிலந்தி என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.