சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, தீபிகா படுகோனே, ஷோபனா, சரத்குமார், ஆதி, ருக்மிணி விஜயகுமார், ஜாக்கி ஷெராஃப், நாசர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் கோச்சடையான் படம் இப்போ வரும்… அப்போ வரும் என்று சொல்கிறார்கள்.. ஆனால் உண்மையில் கோச்சடையான் எப்போதான் ரிலீஸாகும் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் மண்டையைக்குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.
இந்த கேள்விக்கு ட்விட்டர் இணையதள பக்கத்தில் இந்தப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் பதில் சொல்லியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் கோச்சடையான் வெளியாகிறது. தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் வெளியாக இருப்பதால் தற்போது தெலுங்கு பதிப்பின் டப்பிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், படம் எல்லா மொழிகளிலும் விரைவில் ரிலீசாக இருக்கிறது என்றும் சமீபத்தில் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.