திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமார் அட்டகத்தி, சூதுகவ்வும் என நல்ல படங்களை தயாரிப்பதும் அவற்றை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வெற்றிபெறச் செய்வதுமாக தமிழ்சினிமாவில் ஒரு புதிய வெற்றிக்கூட்டணி உருவாகியுள்ளது. இப்போது அடுத்தகட்டமாக பீட்சா-2 தி வில்லா படத்தின் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நகர்கின்றது இந்தக்கூட்டணி.
தற்போது ’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம்’பீட்சா-2 தி வில்லா’. தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்தப்படத்தில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற செப்டம்பர்-2 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் நடத்த ஸ்டுடியோகிரீன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.