வெற்றிகரமாக 25 படங்களுக்கு இசையமைத்து கால் சதம் அடித்துவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்த ஜி.விபிரகாஷ் கடந்த வருடம் இந்தியிலும் வெற்றிகரமாக கால்பதித்துவிட்டார்.
பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் தானே..? இப்போது அங்கேயும் தன் இசை எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியாக விரைவிலேயே ஒரு ஹாலிவுட் படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதுகுறித்த முறையான அறிவிப்பை சம்பந்தப்பட்ட படக்குழுவினரே விரைவில் அறிவிப்பார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.