சூப்பர்ஸ்டார் ரசிர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. கோச்சடையான் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் டைரக்ஷன் மேற்பார்வையாளராக இருக்கும் இயக்குனர் மாதேஷ் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படத்தின் டீஸரை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது.