பார்ப்பதற்கு சில்க் மாதிரியே இருக்கிறார் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் சொல்லப்படும் கண்ணழகி பிந்துமாதவி சமீபகாலமாக தனது நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இயக்குனர் சேரன் மூலம் பொக்கிஷம் படத்தில் ஒரு சிறிய ரோலில் அறிமுகமானாலும் பிந்துமாதவியை திரும்பி பார்க்கவைத்தது கழுகு திரைப்படம்தான்.
இந்தப்படத்தில் அவர் நடித்ததைவிட அவரது கண்கள்தான் அதிகம் பேசியது. தொடர்ந்து வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தராவிட்டாலும் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் தேசிங்குராஜாவும் பிந்துமாதவியின் நடிப்பை மெருகேற்றியிருப்பது உண்மை.