ஜப்பானில் அஞ்சலி.. ஸ்பெயினில் சமந்தா.. ஸ்விஸ்ஸில் நயன்தாரா..!

207

என்னடா இது தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் நாவல்கள் பெயர் மாதிரி இருக்கேன்னு நினைக்கிறீங்களா? நம்ம கோலிவுட் பியூட்டிஸ், தற்சமயம் இருக்குற இடங்கள்தான் மேலே சொன்னதெல்லாம். இந்தியில் வெளியான போல்பச்சன் படத்தோட தெலுங்கு ரீமேக்ல வெங்கடேஷ், அஞ்சலி ரெண்டுபேரும் நடிச்சுட்டு இருக்காங்க. இந்தப்படத்தோட பாடல் காட்சிக்காகத்தான் அஞ்சலி ஜப்பான் போயிருக்காரு. சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு படத்திற்கு பிறகு வெங்கடேஷும் அஞ்சலியும் இணைந்து நடிக்கும் படம் இது.

ஜூனியர் என்.டி.ஆர், சமந்தா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் தான் ராமையா வஸ்தாவைய்யா. இந்தப்படத்தில் மற்ற அனைத்துக் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட, இப்போது மீதமுள்ள ஒரேயொரு பாடல்காட்சியில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார் சமந்தா.

தெலுங்கின் இளம் முன்னணி நடிகரான கோபிசந்த், தமிழில் முதன்முதலாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தின் பாடல் காட்சிக்காகத்தான் கோபிசந்த், நயன்தாரா இருவரும் ஸ்விட்சர்லாந்து பறந்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.