“இசைஞானிக்கு விழா எடுக்கவேண்டும்” ‘ராணி’ விழாவில் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..!

143

rani-audio-release

‘கபாலி’ படத்தை தொடர்ந்து சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘ராணி’.. சமுத்திரக்கனியின் சீடரான பாணி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது.

பொதுவாக விழாக்கள் என்றாலே தவிர்த்துவிடும் இசைஞானி இளையராஜா. இதில் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சமுத்திரகனி, கரு,பழனியப்பன், பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பேசிய கரு.பழனியப்பன், “நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் என்பதால் தான். இப்போது கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்கிறேன்..” என்றார்.

அவற்றில் ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இதுவரை இசையமைத்த படங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும் என்பது. மற்றொன்று ஒட்டு மொத்த திரையுலகையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான். “கண்டிப்பாக இளையராஜா இதற்கும் மறுப்பு தெரிவிப்பார்.. நான் யுவனிடம் பேசிகொள்கிறேன்” என்றார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

Comments are closed.