அமெரிக்க பாடகரை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி..!

235

a-r-rehaina-narayanan-mohan-press-meet
தமிழ் சினிமாவில் பாட்டு பாடுவதற்குப் ஆந்திரா, கேரளா, வடக்கே மும்பையிலிருந்தெல்லாம் வந்து பாடிப் பல பாடகர்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இப்போது அமெரிக்காவிலிருந்து பாடகர் ஒருவர் வந்து இங்கே பாடியுள்ளார். அவர் பெயர் நாராயணன் மோகன். ‘அய்யனார்வீதி’ , ‘தொண்டியான்’ ஆகிய படங்களில் பாடியுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

Related Posts

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நாராயணன் மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசும்போது, “அண்மையில் நாராயணன் மோகன் நடத்திய கச்சேரியை நான் பார்த்து வியந்தேன். அதில் நானும் பாடினேன். .அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அவர் சிறந்த பாடகராக வர வாழ்த்துகள்’.”என்றார்.

இசையமைப்பாளர் யு.கே.முரளி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்துள்ளார் அரசு என்கிற புதுமுகம்.. “இந்தப்படத்தில் வெற்றுடம்புடன் 350 டியூப் லைட்டுகளை உடைத்திருக்கிறேன். வெற்றுடம்புடன் சரவெடிகளை உடம்பில் வெடிக்க வைத்திருக்கிறேன். நெருப்பு உடம்பில் எரிவது போல் நடித்திருக்கிறேன்” என மிரளவைக்கும் அரசு, தனது அடுத்த படத்திற்காக ஹெலிகாப்டரில் இருந்தும் குதிக்கப்போகிறாராம்.

Comments are closed.