டூப் போடாமல் தலைகீழாக தொங்கிய சந்தானம்..!

246

santhanam-fight

ஹீரோவாகி விட்டால் பல விஷயங்களை தியாகம் செய்வதுடன், இன்னும் பல புதிய விஷயங்களுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சந்தானமும் இதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.. தனது கடந்த படமான ‘தில்லுக்கு துட்டு’வில் ஓரளவு சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்தவர் இப்போது அதிரடி சண்டை காட்சிகளுக்கு தாவியுள்ளார்..

தற்போது கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.. இந்தப்படத்தில். வில்லனாக நடிக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான அதிரடியான ஒரு சண்டைக்காட்சி சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது

இதில் டூப் எதுவும் போடாமல், மேல் இருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் சந்தானம் ஸ்டன்ட் காட்சியில் நடித்து யூனிட் ஆட்களின் கைத் தட்டலை பெற்றார். சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியவர என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.. சந்தானத்துக்கு ஜோடியாக அமைரா தஸ்தர் நடிக்கிறார்.

Comments are closed.