மிகுந்த பரபரப்புக்கு இடையே பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள் நாசர் & கோ.. லயோலா கல்லூரியில் பொதுக்குழு கூட்டம் நடத்த மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, நடிகர்சங்க வளாகத்திலேயே பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செயப்பட்டது.. பலத்த போலீஸ் காவலுடன் நேற்று கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது..
இதில் சரத்குமார் தரப்பு ஆதரவாளர்கள் தாங்களும் உறுப்பினர்கள் தான், அதனால் தங்களையும் அனுமதிக்கவேண்டும் என்று அடாவடி தாக்குதலில் ஈடுபட்டனர். வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இவர்களில் சுமார் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த பொதுக்குழுவில் முக்கியமான அம்சமாக சரத்குமார்-ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த பொதுகுழுவில் சுமார் 2000 பேருக்கு அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரிகிறது.. மூத்த நடிகர்கள் சிவகுமார், சச்சு போன்றவர்களுடன் விக்ரம், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விழாவில் நடிகர்கள் பலரும் சாதனையாளர்கள் பெயரில் சினிமா நூற்றாண்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
Comments are closed.