‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் இரண்டாம் கதாநாயகியான காருண்யா ராம் கன்னடப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மிகத்தெளிவாக, அற்புதமாக தமிழில் பேசினார். இவருக்கு முழு ட்ரெய்னிங்கும் கொடுத்தது சிவராமகிருஷ்ணன் தானாம்.
காருண்யா தமிழில் பேசியதை பார்த்த ஆத்மியா அடுத்ததாக தான் பேசவந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழில் நடிக்க வந்தும் தான் இன்னும் சரியாக தமிழ்பேச கற்றுக்கொள்ளவில்லையே என தன்னைத்தானே நொந்துகொண்டார். ஆனாலும் ஓரளவுக்கு புரியும்படியான தமிழிலேயே பேசி அவர் பங்கிற்கும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.