இருவர் ஒன்றானால் – விமர்சனம்

279

தன்னை காதலிக்கும் பெண்களை எல்லாம் ஜென்டிலாக விலக்கி ஒதுக்குகிறார் நாயகன் பிரபு. தன்னை கவர்ந்த நாயகி கிருத்திகா மாலினியை ஏதேச்சையாக காணும் பிரபு, அவரிடம் காதலை சொல்ல, அவரோ பிரபுவை விரட்டியடிக்கிறார்.. ஒரு கட்டத்தில் மாலினியின் இதயம் கசிந்து, பிரபுவை காதலிப்பதாக சொல்ல, ஸாரி.. இது செட்டாகாது என ஒதுங்குகிறார் பிரபு. பிரபுவின் மாற்றத்திற்கு காரணம் என்ன.. காதலர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

அடிக்கடி கிரைண்டரிலும் மிக்சியிலும் தமிழ்சினிமா அரைத்து பிழிந்த காதல் கதை தான். ஆனாலும் இந்தப்படம் போரடிக்கவில்லை.. புதுமுகங்கள் தான் என்றாலும் ரசிக்க முடிகிறது. காமெடி நடிகர்கள் என யாரும் இல்லை. ஆனாலும் சிரிக்க வைக்கிறார்கள்..

இந்தப்படத்தில் காதலர்களாக நடித்திருக்கும் பிரபுவும் கிருத்திகா மாலினியும் இந்தப்படம் உருவாவதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந்தே காதலர்கள் என்பதும், இந்தப்படம் முடிந்ததும் அவர்கள் திருமணம் நடைபெற்ற காட்சிகளை க்ளைமாக்சில் இணைத்திருப்பதும் கதைக்கு ஏக பொருத்தம்.

கதாநாயகன் பிரபுவின் பக்கத்து வீட்டு பையன் போன்ற முகமும், அவரது இயல்பான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். தன்னை காதலித்த, ஆனால் தான் ஒதுக்கிய பெண்களை எல்லாம், நட்புடம் டீல் செய்யும் இடத்தில் இவர் கேரக்டரின் மேல் மிகப்பெரிய மரியாதை ஏற்படுகிறது.

கதாநாயகி கிருத்திகா மாலினியையும் குறைத்து சொல்லிவிடமுடியாது. தன்னையே சுற்றிவரும் பிரபுவை ‘நீ நாய் தாண்டா’ என திட்டுவதும், பின்னால் அப்படியே உல்டவாகி, பிரபுவை லவ்வ ஆரம்பிக்கும்போதும் அழகான காதலியாக மிளிர்கிறார்…

பிரபுவை காதலிக்கும் பெண்களும் சரி, கிருத்திகாவின் தோழியாக வரும் ஷ்ரேயாவும் சரி. படத்தின் இயல்பான கதாபாத்திரங்களாக உலாவருகிறார்கள்… அழுத்தமில்லாத, ஆனால் அதேசமயம் அலுப்பில்லாத உற்சாகமான காதல் கதையை படமாக தந்திருக்கிறார் இயக்குனர் அன்பு.

Comments are closed.