ஆறு வருடமாக காதலித்த, காதல்ஜோடி இணைந்து நடித்த அதிசயம்..!

243

படத்தில் நடிக்கும்போது அதில் நடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் ஏற்பட்டு, சில பல போராட்டாங்களுக்கு பின்னர் திருமணத்தில் முடிந்த பல சினிமா நட்சத்திர காதல் கதைகளைத்தான் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.. பார்த்திபன்-சீதா, பாக்யராஜ்-பூர்ணிமா என பல ஜோடிகள் இதற்கு உதாரணமாக இருக்கிறார்களே..

ஆனால் ஆறு வருடமாக காதலித்துவந்த நிஜ காதலர்கள் இருவர், படத்திலும் காதலர்களாக நடித்து, படப்பிடிப்பு முடிந்ததும் திருமணமும் செய்துகொண்டுள்ளார்கள். அந்த திருமணத்தையே படத்தின் க்ளைமாக்ஸாகவும் வைத்துள்ளார்கள். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ள, பி.ஆர்.பிரபுவும் நடிகை கிருத்திகா மாலினியும் தான் அந்த நிஜக்காதலர்கள்.

“காதலிக்க ஆரம்பித்த காலத்தில் வான்வெளியில் பறப்பது போலிருந்தது. மனசுக்குள் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது” என்கிறார் பி.ஆர்.பிரபு. ஆனால் கிருத்திகா மாலினியோ, “என்னைப் பொறுத்தவரை காதல் இனிமையானதுதான். ஆனால் கனவில் மிதப்பது அல்ல. நம் வாழ்க்கைத்துணை நம்மைப் புரிந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும்” என காதலின் இன்னொரு பக்கத்தை சொல்லுகிறார்.

Comments are closed.