ஹேப்பி பர்த்டே தமன்!

46

பாய்ஸில் ஐந்து பையன்களில் ஒருவராக வந்து கலக்கிய அந்த குண்டுப்பையன் தமனையும் அவர் அடித்த கூத்துக்களையும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? அந்தப்படத்தில் நடித்த மற்றவர்கள் நடிகர்களாக தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டங்களை தேட, தமனோ தனக்குள் இருந்த இசை ஆர்வம் உந்தித்தள்ள நடிப்பை விட்டுவிட்டு இசையமைப்பாளராக மாறினார்.

சீரான இடைவெளியில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இசையமைத்து வரும் தமனுக்கு தமிழை விட தெலுங்குப்படங்களில் தான் மவுசு ஜாஸ்தி. அங்கே முன்ன்னி இளம் ஹீரோக்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் படங்களுக்கு இவர்தான் ஆஸ்தான மியூசிக் டைரக்டர்.

தமிழில் சமீபத்தில் இவர் இசையமைத்திருந்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படப்பாடல்கள் ஹிட்டான நிலையில், அடுத்தாக இவர் இசையில் வல்லினம் படம் வெளியாக இருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் தமனுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.