பொங்கலுக்கு ரஜினி, அஜீத், விஜய் அதற்கப்புறம் கமல் படங்கள் என வரிசையாக வெளியாவது இருக்கட்டும். டிசம்பர் இறுதி வாரத்தில் மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு விடுமுறைவிட்டு விடுவார்கள். அப்படின்னா அவர்களின் விடுமுறை கொண்டாட்டத்தை துவங்கி வைக்கப்போவது யாரு?
வேறு யாரு சின்னக்குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவான நம்ம கார்த்தி தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படம் விடுமுறைக் கொண்டாட்டமாக வரும் டிசம்பர் 20ல் வெளியாக இருக்கிறது. ‘மங்காத்தா’ வெற்றிக்கு பிறகு வெங்கட்பிரபு தன் பாணியில் கார்த்தி ரசிகர்களுக்கு இந்த ‘பிரியாணி’ விருந்தை பரிமாற இருக்கிறார்.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் ‘சிறுத்தை’ படத்தை தொடர்ந்து ‘சகுனி’ படம் ரிலீஸாக எடுத்துக்கொண்ட காலம் 524 நாட்கள். ஆனால் அதிசயமாக இப்போது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கும் பிரியாணிக்கும் உள்ள இடைவெளி வெறும் 48 நாட்கள் தான்.