நட்சத்திரங்களை அழகாகக் காட்டுவதில் அந்தப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனருக்கே முக்கிய பங்கு உண்டு. மங்காத்தாவிலும் பில்லா-2விலும் அஜீத் அவ்வளவு ஸ்டைலிஷாக தெரிந்த்தற்கு காரணம் அவரது ஆடைகளை வடிவமைத்த வாசுகி பாஸ்கர்தான். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகளான வாசுகி பல நட்சத்திரங்களின் பர்சனல் டிசைனரும்கூட.
முதலில் இவருக்கு கண்களால் கைது செய் படத்தில் உடை வடிவமைப்புக்கு வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தொடர்ந்து சென்னை-28, கோவா, ஆரண்யகாண்டம், அவன் இவன், மங்காத்தா, என பல படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் வாசுகி பாஸ்கருக்கு behindframes தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.