யாரும் எதிர்பார்க்காத விஷயம். ஆனால் நடந்திருக்கிறது. ஆம் சிம்புவை ஹீரோவாக வைத்து நேற்று இரவு தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார் கௌதம் மேனன். சூர்யா படம் ட்ராப் ஆன வருத்தம் ஒரு பக்கம், அஜீத்துடன் நடந்த பேச்சு வார்த்தை நிலுவையில் இருப்பது ஒரு பக்கம் என சோகத்தில் இருந்த கௌதம் மேனன் கடைசியாக போய் நின்றது சிம்புவிடம் தான்.
தன்னை வைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் கௌதம் என்பதாலும் அவ்வளவு பெரிய டைரக்டர் தன்னைத்தேடி வந்திருக்கும்போது தானும் அவரை கைவிடுவது நன்றாக இருக்காது எனவும் நினைத்த சிம்பு, கௌதம் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின் ஒருவரை தேடி வருகிறார் கௌதம் மேனன். படத்திற்கு இசையமைப்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். மீண்டும் வி.டி.வி. வர்ணஜாலத்தை இதிலும் காட்டுவார் என எதிர்பார்க்கலாம். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் தான் இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கிவரும் படத்தில் நடித்து வரும் சிம்பு, இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க இருக்கிறார்.