‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிவரும் ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றுள்ளது என்பது உண்மை. யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பது, படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இரண்டாவது படம் என்பது உட்பட படத்திற்கு மைலேஜ் தரும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகளை முடித்துவிட்ட இயக்குனர் சரவணன், பட ரிலீஸுக்கான வேலைகளில் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் பட்த்தை வரும் டிசம்பர்-13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விக்ரம் பிரபு நடித்த முதல் படமான ‘கும்கி’ கடந்த வருடம் டிச-14ல் வெளியானது. சரியாக ஒரு வருட முடிவில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம்.